என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீராம்பட்டினம் தேரோடும் வீதியில்  ரூ.25 லட்சத்தில் தார் சாலை
    X

    தார் சாலை அமைக்கும் பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.


    வீராம்பட்டினம் தேரோடும் வீதியில் ரூ.25 லட்சத்தில் தார் சாலை

    • பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதியதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் தேரோடும் வீதியில் சுமார் ரூ.25 லட்சம் செலவில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    பாஸ்கர் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை செயற்பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன், ஒப்பந்ததாரர் அழகர், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


    Next Story
    ×