என் மலர்

  புதுச்சேரி

  நெட்டப்பாக்கம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலி
  X

  நெட்டப்பாக்கம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெட்டப்பாக்கம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலியானார்.
  • மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நெட்டப்பாக்கம்:

  புதுவை மாநிலம் நெ ட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் தனுஷியா (வயது 25). பல் டாக்டரான இவரும், அதே பகுதியை சேர்ந்த சித்தா டாக்டர் ஸ்ரீராம் என்பவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

  திருமணத்துக்கு பிறகு 2 பேரும், சென்னையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். கடந்த வாரம் தனுஷியாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

  இதையடுத்து சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மடுகரையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்தார்.

  நேற்று முன்தினம் இரவு தனுஷியாவுக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், டெ ங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தனுஷியா பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  டெங்கு காய்ச்சலுக்கு பல் டாக்டர் பலியான சம்பவம் அ ப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×