என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய மந்திரியுடன் சபாநாயகர் சந்திப்பு
    X

    டெல்லியில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழ் வழங்கிய காட்சி.

    மத்திய மந்திரியுடன் சபாநாயகர் சந்திப்பு

    • புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்
    • புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரியை புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று காலை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்தார். அப்போது புதுவை மாநிலத்தில் சுற்றுலா மேம்பட்டு திட்டங்கள் குறித்து சபாநாய கர் ஏம்பலம் செல்வம் விளக்கினார்.

    மேலும் புதுவையில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 இடங்களில் நிறுவப்படவுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் தாங்கிய தியாகசுவர் குறித்தும் எடுத்துக்கூறினார். இதைத்தொடர்ந்து புதுவையில் நிறுவப்பட்டு வரும் முதல் தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அழைப்பிதழ் வழங்கினார்.

    இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அருள்முருகன், சக்கரா பவுண்டேசன் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×