என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய ரெயில்வே மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மனு
    X

    மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மனு அளித்த காட்சி.

    மத்திய ரெயில்வே மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மனு

    • புதுடெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
    • ஏனாம் மக்கள் புதுவைக்கு 120- கி.மீ. பஸ் பயணம் செய்கின்றனர். எனவே இந்த சேவையை புதுவை வரை நீட்டித்து தர வேண்டும் என கோரினார்.

    புதுச்சேரி:

    புதுடெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    மனுவில், புதுவை மாநில பகுதிகளில் ஒன்றான ஏனாம் பிராந்தியம் புதுவையிலிருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை அப்பகுதி மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ெரயில் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படுகிறது.

    இதனால் ஏனாம் மக்கள் புதுவைக்கு 120- கி.மீ. பஸ் பயணம் செய்கின்றனர். எனவே இந்த சேவையை புதுவை வரை நீட்டித்து தர வேண்டும் என கோரினார். இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.

    Next Story
    ×