என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு சமூக அமைப்பினர் பாராட்டு
    X

    சமூக அமைப்புகள் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்த காட்சி.

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு சமூக அமைப்பினர் பாராட்டு

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோருக்கு சமூக அமைப்புகள் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
    • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பாதுகாப்புக் குழு பொறுப்பாளர் சுகானந்தம் ஆகியோர் சால்வை அணிவித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    குரூப்-பி அரசிதழ் பதிவுப் பெறாத பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

    இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோருக்கு சமூக அமைப்புகள் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் ஜெகன்நாதன், தமிழர் களம் செயலாளர் அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர்பாவாடைராயன், பழங்குடி மக்கள் விடுதலை இயக்கம் செயலாளர் ஏகாம்பரம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் சம்சுதீன், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம் செயலாளர் தமிழ்நெஞ்சன், தமிழ் பாதுகாப்புக் குழுத் தலைவர் சுகுமாரன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பாதுகாப்புக் குழு பொறுப்பாளர் சுகானந்தம் ஆகியோர் சால்வை அணிவித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

    Next Story
    ×