என் மலர்
புதுச்சேரி

ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.
புதுவை தலைமை செயலகம் முற்றுகை
- உதவி யாளர் பதவிகளை நிரப்ப கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- இதனால் உதவியாளர் தேர்வு அறிவிக்கப்பட வில்லை.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடாது என அமைச்சக ஊழி யர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீனியாரிட்டி அடிப்படையில் உதவி யாளர் பதவிகளை நிரப்ப கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனால் உதவியாளர் தேர்வு அறிவிக்கப்பட வில்லை. இந்த நிலையில் தற்போது துறை ரீதியிலான போட்டித்தேர்வு நடத்தி உதவியாளர் தேர்வு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் தலைமை செய லகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமை செயலக நுழைவுவாயில் தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தலைமை செயலரின் காரை வழிமறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






