என் மலர்
புதுச்சேரி

ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்திய குடிசை மாற்று வாரிய ஊழியர்கள்.
குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் நூதன போராட்டம்
- புதுவை பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை . நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை அரசு சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 22-வது நாளாக நிலுவை ஊதியம் வழங்க கோரி அலுவலக வாயில் முன்பு ஊழியர்கள் அனைவரும் ஒற்றை காலில் நின்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கை–களை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story






