என் மலர்
புதுச்சேரி

பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு அமைச்சர் நமச்சிவாயம் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சைபர் குற்றங்களை தடுக்க தனிபோலீஸ் நிலையங்கள்-அமைச்சர் நமச்சிவாயம்
- புதுவை போலீஸ் துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 36 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
- சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதைப் பொருள் கடத்தலை தடுப்பதிலும் புதுவை போலீஸ் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை போலீஸ் துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 36 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி நிறைவு விழா கோரிமேடு மைதானத்தில் நடந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு தேர்வில் சிறப்பிடம் பிடித்த 14 பேருக்கு சான்றிதழையும், கவாத்து பயிற்சியில் சிறந்து விளங்கிய 4 பேருக்கு கோப்பைகளையும் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கி பேசியதாவது:-
சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதைப் பொருள் கடத்தலை தடுப்பதிலும் புதுவை போலீஸ் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.
போலீஸ் துறையை நவீனப்படுத்தவும்,துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 92 பணியிடங்களை நிரப்பவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 390 கான்ஸ்டபிள்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.
இப்போது 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்க்காவல்படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுவையில் சைபர் குற்றங்களை தடுக்க சைபர் குற்ற போலீஸ் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டி.ஜி.பி. மனோஜ்குமார்லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி.சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதிக்ஷா கோத்ரா, தீபிகா, நாராசைதன்யா உட்படபல ர்கலந்துகொண்டனர்.






