search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தால் புதுவை மக்கள் அச்சம்
    X

    கோப்பு படம்.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தால் புதுவை மக்கள் அச்சம்

    • தி.மு.க. கண்டனம்
    • அணிவகுப்பை ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுவை மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஊட்டியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் சிதைக்க பாடுபடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் புதுவையில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சபாநாயகர் கலந்து கொண்டது மரபு களை மீறும் செயலாகும்.

    சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் போதித்த காந்தியடிகள், வள்ளலார், அம்பேத்கார் பெயரில் புதுவை மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.

    2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுவை மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஊட்டியுள்ளனர்.

    புதுவை மக்களின் கலாச்சாரத்திற்கும், பன்முகத்தன்மை க்கும் துளியும் ஒவ்வாத ஒரு ஊர்வலத்துக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்துள்ளார். ராஜ்யசபா எம்.பி. செல்வ கணபதி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

    ஊர்வலத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், பா.ஜனதா

    எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரபுகளையும் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கே எதிரானதாகும்.

    இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்க ளுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×