என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை அமைக்கும் பணி-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    X

    சாலை பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    சாலை அமைக்கும் பணி-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

    • பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ.88 லட்சத்து 67 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.
    • மலையாளத்தான் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்குட்பட்ட வில்லியனூர் - பாகூர் சாலை, கோட்டைமேடு சந்திப்பில் இருந்து உறுவையாறு சந்திப்பு வரையிலும் மற்றும் உறுவையாறு சந்திப்பில் இருந்து திருக்காஞ்சி வழியாக கீழ்அக்ராஹாரம் வரையிலும் உள்ள சாலைகளை பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ.88 லட்சத்து 67 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை விழா உறுவையாறு சந்திப்பில் நடந்தது.அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து சாலை பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரராஜி, உதவிப்பொறியாளர் கோபி, இளநிலைப்பொறியாளர் நடராஜன், ஒப்பந்ததாரர்கள் அருணகிரி, மலையாளத்தான் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×