search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரெஞ்சுகாரன் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
    X

    பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிய காட்சி.


    பிரெஞ்சுகாரன் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்

    • விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் இருந்து திருவண்டார் கோவில் பகுதி வரை பிரெஞ்சுகாரன் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. மழைக்காலங்களில் வாய்க்காலில் மழைநீர் செல்வது வழக்கம்.

    இப்போது இந்த வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. மேலும் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப் பட்டுள்ளது.

    அதிலிருந்த வரும் கழிவு நீரும் இந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    எனவே தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் திறந்த வெளியாக உள்ள கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக சரி செய்து அங்கு கழிவுநீர் தேங்கி நிற்காமல் வாய்க்காலில் தடை இன்றி செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×