என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வலியுறுத்தல்
- புதுவையில் ரேஷன்கடைகள் மூலம் மூலமாக அரிசி உள்பட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இரட்டை அவியல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி, ஜூலை 16-
புதுவையில் ரேஷன்கடைகள் மூலம் மூலமாக அரிசி உள்பட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்பின் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப் பட்டதால் ரேஷன்கடைகள் மூடப்பட்டன. இதனால் ரேஷன்கடை ஊழியர்கள் சம்பளமின்றி தவிக்கின்றனர். கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இரட்டை அவியல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை ரேஷன்கடைகள் மூலம் வழங்காமல் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுவை குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் டெல்லியில் நடந்த நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் சார்பில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் புதுவை மக்க ளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்க வேண்டும்.
ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். மக்களுக்கு ஒற்றை அவியல் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதன் விளைவாக பொது விநியோக முதன்மை ஆலோசகர் பங்கஜ்மிஸ்ரா தலைமையில் ஒன்றிய அதிகாரிகள் புதுவைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பிறகு சட்டசபையில் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பணத்துக்கு பதில் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர். கூட்டத்தில் புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






