search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
    X

    மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்ற காட்சி.

    விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    • அரசுக்கு நலச் சங்கம் கோரிக்கை
    • புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சங்க தலைவர் காரத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், கோகுல்காந்தி. வீரபாரதி, பாலுசாமி, அருள்ஜோதி, பிரகதீஸ்வரர், சுரேஷ், கோடீஸ்வரன் சுப்ரமணி, இருதயராஜ் ஜில் முன்னிலை வகித்தனர். சதீஷ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    படஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச இன்சூரன்ஸ் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

    மேற்படிப்பு அரசு வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களுக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.

    இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜிவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும். விளையாட்டுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளுக்கு விளையாட்டு அரங்கங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    செந்தில்வேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×