என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டெங்குவால் இறந்த பெண்கள் குடும்பத்திற்கு நிவாரணம்
    X

    கோப்பு படம்.

    டெங்குவால் இறந்த பெண்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • குப்பைகள் மற்றும் இதர கழிவுகளின் நகரமாகவே புதுவை காட்சியளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் டெங்கு பாதித்து 2 பெண்கள் பலியாகியுள்ளது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு டெங்கு பாதிப்பை முன்னெச்சரிக்கையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. குப்பைகள் மற்றும் இதர கழிவுகளின் நகரமாகவே புதுவை காட்சியளிக்கிறது.

    புதுவை அரசு டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரம், உள்ளாட்சி, பொதுப்பணி துறைகள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

    கொசு ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×