search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்திரா காந்தி சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவிப்பு
    X

    கிருமாம்பாக்கம் மந்தை வெளி திடலில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்திரா காந்தி சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவிப்பு

    • பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி இந்திராகாந்தி சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கே.டி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி நினைவுதினம் இன்று அனுச ரிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள்

    எம்.எல்.ஏ. நீலகங்காதரன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், நிர்வாகிகள் சரவணன், சேகர், கோவிந்தராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் உட்பட பலர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி (உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடலில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் ஏம்பலம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மண்ணாங்கட்டி, பாலையா மற்றும் நிர்வாகிகள் சக்ரவர்த்தி கிராமிணி, பாலு, செல்வம், லெனின், ராஜாராம், ஜெபக்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    Next Story
    ×