search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை ஏரிகளில் மழை நீர் தேங்க தொடங்கியுள்ளது
    X

    கோப்பு படம்.

    புதுவை ஏரிகளில் மழை நீர் தேங்க தொடங்கியுள்ளது

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • மழை வெள்ளம் அதிகளவில் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பதுவையில் நேற்று 24 மணிநேரம் பெய்த தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி வருகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவ மழை அதிகமாக இருக்கும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த வாரம் கூட்டத்தை கூட்டி அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டார்.

    பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, மின் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் நள்ளிரவு முதல் பணியாற்றி வெள்ளப் பாதிப்பை தடுத்துள்ளனர்.தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் வெளி யேற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டதனால் மழை நீர் தேங்கும் பகுதிகள் சீரமைக்கப் பட்டுள்ளது. மேலும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதனால் புதுவை மற்றும் காரைக்காலில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு ள்ளது.

    சங்கராபரணி ஆறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் மழை வெள்ளம் அதிகளவில் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பிள்ளையார்குப்பம் படுகை அணை புதிதாக கட்டும் பணி ஜனவரி மாதம் தொடங்கும். மற்ற படுகை அணைகளில் மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கடுமையான மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிக் கூடங்கள், நகராட்சி சொந்த மான கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு செல்லவும். அங்கு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    புதுவையில் 84 ஏரிகளில் உள்ள மண்ணை தேவையானவர் எடுத்து செல்லலாம் என்று கூறியதன் காரணமாக தற்போது ஏரிகளில் நீர் அதிக அளவில் தேங்க தொடங்கி உள்ளது. மேலும் மழைக்காலத்தில் நீர் பிடிப்பு பகுதியில் நிறைய தண்ணீரை சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×