search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை இளைஞர்கள் கஞ்சா, மதுவை தேடி ஓடுகின்றனர்
    X

    கோப்பு படம்.

    புதுவை இளைஞர்கள் கஞ்சா, மதுவை தேடி ஓடுகின்றனர்

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வேதனை
    • புதுவையில் உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என முதல்- அமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை விடுதலை நாள் விழாவை கீழூரில் நடத்தியிருந்தால் உணர்வுள்ளதாக இருந்தி ருக்கும். முதலமைச்சர் தனது உரையில் புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், அவர்களின் தியாகத்தை பற்றி குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது. புதுவையில் உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என முதல்- அமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்.

    புதிய தொழிற்சாலைகள் இல்லாமல் தொழில் வளர்ச்சி எப்படி வந்தது? புதுவையில் அனைத்து மில்களும் மூடப்பட்டு கிடக்கிறது. விவசாய உற்பத்தி, மீன்வளத்துறையும் உயரவில்லை. புதுவையின் வளர்ச்சி சதவீதம் 4 சதவீதமாக குறைந்துள்ளது. விலைவாசி உயர்வு 8 சதவீதமாக உள்ளது.

    இந்த நிலையில் புதுவை எல்லா துறையிலும் முன்னேறியுள்ளது என எப்படி பெருமைப்பட முடியும்? புதுவையில் ஒரு குடும்பத்தினர் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரத்து 780 என குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் புதுவையில் ஒரு குடும்பம்கூட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ வாய்ப்பில்லை.

    ஆனால் புதுவையில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. உண்மையில் தனி நபர் வருமானம் 4.5 சதவீதம் குறைந்துள்ளது. வேலையும், வாழ்வாதாரமும் வருமானமும் இல்லாமல் வாழ்க்கையை தொலைத்து விட்டு கஞ்சாவையும் மதுவையும் நாடி ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் புதுவையில் அதிகரித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×