என் மலர்
புதுச்சேரி

புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி பேசி உபகரணங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்த காட்சி.
புதுவை வீரர்கள் கர்நாடகா பயணம்
- தேசிய அளவிலான தேக்வோண்டோ போட்டி நடைபெற்றது.
- அமிர்தா ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, மற்றும் சிராக் ராகவேந்திரா ஆகியோர் தேர்வாகி தேசிய போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி:
40-வது தேசிய ஜூனியர் தேக்வோண்டோ குறுகி மற்றும் 13-வது தேசிய பூம்சே போட்டிகள் கர்நாடக மாநிலம் சிமோகாவில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
இப்போட்டி புதுவை விளையாட்டு நலத்துறை மற்றும் பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தால் நடந்து முடிந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஜூனியர் மாணவ-மாணவிகள் முறையே தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத் அமலோற்பவம் பள்ளி, ரமணன் சங்கர வித்யாலயா பள்ளி, பீஷ்மர் மற்றும் பிரவீன் குமார் வாசவி இண்டர்நேஷனல் பள்ளி, மனோஜ் வித்யா நிகேதன் பள்ளி, ஹேமச்சந்திரன் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி, அகல்யா மற்றும் வைஷ்ணவி சவராயலு நாயக்கர் பள்ளி, பிருந்தா செவன்த்டே பள்ளி, மிஸ்ரா சுசிலாபாய் பள்ளி, அமிர்தா ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, மற்றும் சிராக் ராகவேந்திரா ஆகியோர் தேர்வாகி தேசிய போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச பயிற்சியாளர் பகவத்சிங் தலைமை பயிற்சியாளராகவும், கீர்த்தனா மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் பயிற்சியாளர்களாகவும் தக்ஷிணபிரியா அரவிந்த் செல்வன் ஆகியோர் தேசிய நடுவர்களாகவும் உடன் செல்கின்றனர்.
புதுவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற வழி அனுப்பும் விழாவில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி பேசி உபகரணங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தார் உடன் பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் பொருளாளர் அரவிந்த், அமைப்பு செயலாளர் நந்தகுமார், மற்றும் சங்க நிர்வாகி மதன் ஆகியோர் உடன் இருந்தனர்.






