என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவையில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம்-லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. பேச்சு
- மாணவர்கள் தீய பழக்கத்திற்கு செல்லாமல் இருக்க விளையாட்டு, யோகா போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
- சர்வதேச நண்பர்கள் தினத்தன்று போலீசார் தங்களது பகுதிகளில் நல்லுறவு கூட்டம் நடத்த வேண்டும்.தலைகவசம் அபராதத்தை நெறிப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் பேசியதாவது:-
மாணவர்கள் தீய பழக்கத்திற்கு செல்லாமல் இருக்க விளையாட்டு, யோகா போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு உளவியல் வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்களை மாடித்தோட்டம், காடுகள் வளர்க்க ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும்.
காவல்துறையும், இளைய சமுதாயத்தையும் ஒன்றிணைக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சர்வதேச நண்பர்கள் தினத்தன்று போலீசார் தங்களது பகுதிகளில் நல்லுறவு கூட்டம் நடத்த வேண்டும்.தலைகவசம் அபராதத்தை நெறிப்படுத்த வேண்டும்.
காவலர்கள் புகார் ஆணை யத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மின் கம்பியில் சிக்கி இறக்கும் ஆடு மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
வடமாநில தொழி லாளர்கள் ஆதிக்கம் புதுவையில் அதிகமாக உள்ளது. அரசு இதில் தலையிட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு லட்சுமிகாந்தன் பேசினார்.






