search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை சட்டசபை தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது
    X

    கோப்பு படம்.

    புதுவை சட்டசபை தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது

    • பா.ஜனதா ஆளும் மாநில முதலமைச்சர்களின் ஊழல்கள் மீது மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
    • புதுவையில் பா.ஜனதாவை புல்லு பூண்டு தெரியாத அளவிற்கு ஒழித்து விட வேண்டும்

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு, நீதி மறுப்பை கண்டித்து புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுவை காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்.பி-யுமான வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-

    கடந்த 9 ஆண்டு கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், பா.ஜனதா ஆளும் மாநில முதலமைச்சர்களின் ஊழல்கள் மீது மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    மாநில அந்தஸ்திற்காகத்தான் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தோம் என கூறிய ரங்கசாமி இப்போது அதுபற்றி வாய் திறப்பதில்லை. புல்லட் ரெயில் போல புதுவை வளர்ச்சி பெறுவதாக கவர்னர் தமிழிசை கூறுகிறார். ஆனால் முதல்-அமைச்சர் நிதி இல்லை என அதிருப்தி தெரிவிக்கிறார்.

    புதுவை பொதுப்பணி துறையில் பணிகள் ஒதுக்குவதற்காக 20 சதவீதம் கமிஷனாக பெறப்படுகிறது, உரிமை வழங்குவதில் பார் ஒன்றுக்கு ரூ 20 லட்சம் கமிஷன் பெறப்படுகிறது, முதல்-அமைச்சருக்கு உண்டான பங்கு வந்துவிடுகிறது.

    புதுவையில் நில, வீடு அபகரிப்பில் தனி நபர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள். தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே ஈடுபட்டு வருகிறார்கள், எனவே வீட்டை பூட்டிவிட்டு யாரும் வெளியே சென்று விடாதீர்கள். வீட்டிற்கு உள்ளே பா.ஜனதா காரன் புகுந்து வீட்டை அபகரித்து கொள்வான்.

    வேலை இல்லா திண்டாட்டத்தால் டாக்டர்கள், என்ஜினியர்கள் கஞ்சா விற்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளளனர்.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்சம் வாக்கு வாக்கு வித்தியாசத்தில் வைத்தியலிங்கத்தை வெற்றி பெற வைத்தது போல் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    2026-ல் சட்டமன்றத் தேர்தல் வரை முதல் அமைச்சர் ரங்கசாமி தாங்க மாட்டார். அவர் வேலையை பாஜகவினர் முடித்து விடுவார்கள். அதனால் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் புதுவை சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

    அதனால் நாம் ஒற்றுமையுடன் இருந்தால் புதுவையில் பா.ஜனதாவை புல்லு பூண்டு தெரியாத அளவிற்கு ஒழித்து விட வேண்டும்

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×