என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கலால்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    கலால் துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    கலால்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

    • புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    புதுவை சாமிபிள்ளை தோட்டத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஏற்கனவே இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டால் தினமும் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பதால் புதிதாக மதுக்கடை திறக்ககூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    எனினும் அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் சோசலிஸ்டு கம்யூனிஸ் வக்கீல் லெனின்துரை, சுப்பையா,

    தமிழர் களம் அழகர், நாம் தமிழர் ரமேஷ், சாமிபிள்ளை தோட்டம் போராட்டக்குழு தலைவர் பார்த்தீபன் உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கேட்டனர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்கவில்லை. இதனால்

    போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 30 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×