என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 வழிச்சாலை பணியை ஒருவாரத்துக்குள் முடிக்காவிட்டால் போராட்டம்
    X

    கோப்பு படம்.

    4 வழிச்சாலை பணியை ஒருவாரத்துக்குள் முடிக்காவிட்டால் போராட்டம்

    • அங்காளன் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • தண்ணீர் குழாய் அமைக்கும் பணி மதகடிப்பட்டு திருபுவனை திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் விடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டில் இருந்து திருபுவனை திருவாண்டார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 4 வழி சாலை விரிவுபடுத்துப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணி பொதுமக்களுக்கு நல்லது என்றாலும் இந்த பணியால் திருபுவனை தொகுதிக்குட்பட்ட பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக தண்ணீர் குழாய் அமைக்கும் பணி மதகடிப்பட்டு திருபுவனை திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் விடுபட்டுள்ளது.

    மேலும் நெடுஞ்சாலையின் இரு புறமும் கிராமப்புற ங்களுக்கு செல்லும் இணைப்பு சாலை துண்டிக்கப்ப ட்டதால் போக்குவரத்து இடையூறாகவும் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, மின்துறை உதவி பொறியாளர் அலுவலகம், விவசாய பண்ணை மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதனால் பொதுமக்களை சந்திக்க முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பணி நடைபெறவில்லை.

    பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் புதுச்சேரியில் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் பொறியாளர்கள் நேரில் சென்று மேல் குறிப்பிட்ட அனைத்து வேலைகளையும் முடித்து தருகிறோம் என்று உறுதி கூறினர்.

    ஆனால் இதனால் வரை அப்பணியை செய்து முடிக்கவில்லை இதனால் இப்பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்காவிட்டால் தொகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் மறியல் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும்

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×