என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் விடுதி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்

    தனியார் விடுதி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

    • புதுவை பாக்கமுடையான் பட்டு ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 1½ மாதமாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • இவருக்கு திருமணமாகி அவரது மனைவி விவகா ரத்து பெற்று சென்று விட்டதாக தெரிகிறது

    புதுச்சேரி:

    தனியார் விடுதி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது34). இவர் புதுவை பாக்கமுடையான் பட்டு ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 1½ மாதமாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி அவரது மனைவி விவகா ரத்து பெற்று சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் அலெக்ஸ் மது குடிக்க தொடங்கினார். தனது மன வேதனையை அவ்வப்போது அவருக்கு தெரிந்த நண்பரான லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த பவித்ரன் என்பவரிடம் போனில் அடிக்கடி பேசி வருத்தப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் பணி முடிந்து விடுதி அறைக்கு தூங்க செல்வதாக அலெக்ஸ் மற்ற ஊழியர்களிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மற்ற ஊழியர்கள் அலெக்ஸ் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் அலெக்ஸ் தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி விவாகரத்து பெற்று சென்றதால் அலெக்ஸ் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து விடுதி மானேஜர் விக்னேஸ்வரன் கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×