என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
- புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் குணாளன்.
- ஆயுத பூஜை வேலை இருப்பதால் வெளியே செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் குணாளன். இவர் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுதந்திர தேவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நேற்று ஆயுத பூஜையை யொட்டி விடுமுறை என்பதால் குணாளன் குடும்பத்துடன் வெளியே செல்லலாம் என மனைவியை அழைத்தார். அதற்கு சுதந்திர தேவி வீட்டில் ஆயுத பூஜை வேலை இருப்பதால் வெளியே செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.
தற்கொலை
இதனால் கணவன்-மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த குணாளன் மனைவியை தாக்கி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தார்.பின்னர் படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சுதந்தர தேவி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கணவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குணாளன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






