என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை

    • பணிச்சுமை காரணமாக அரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப் பாக்கம் அருகே மொளப் பாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது42). இவர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரராக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற போலீஸ்காரர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது அரிகிருஷ்ணன் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார்.

    பணிச்சுமை காரணமாக அரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் இந்த முடிவை மேற்கொண்டாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் பணியின் போது போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×