என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்- கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    உப்பளம் தொகுதியில் கென்னடி எம்.எல்.ஏ. ஒதியஞ்சாலை போலீசாருடன் திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

    போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்- கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் சந்து, மிளாத் வீதி, சந்தாசா கிப் வீதி, சந்தாசாகிப் வீதி, காஜியார் வீதி, முல்லா வீதி, பெரியப்பள்ளி, வீரர்வெளி, வ.உ.சி. வீதி, தில்லை மேஸ்திரி வீதி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடையின் மூடிகளும் அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன.
    • அப்போது போலீஸ் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் சந்து, மிளாத் வீதி, சந்தாசா கிப் வீதி, சந்தாசாகிப் வீதி, காஜியார் வீதி, முல்லா வீதி, பெரியப்பள்ளி, வீரர்வெளி, வ.உ.சி. வீதி, தில்லை மேஸ்திரி வீதி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடையின் மூடிகளும் அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன.

    மேலும் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களும் அதிகப்படியாக திருடப்படுகின்றன.

    ஆகவே அப்பகுதி மக்கள் இரவில் நடமாடும் மர்ம நபர்களை கட்டுப்படுத்த வேண்டும். திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு சென்ற தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது போலீஸ் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவ்வை நகர் பஞ்சாயத்து கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் அசோக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×