என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கேரளாவில் குண்டுவெடிப்பு எதிரொலி புதுவை தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு
    X

    புதுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

    கேரளாவில் குண்டுவெடிப்பு எதிரொலி புதுவை தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு

    • டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மிஷன்வீதி ஜென்ம ராக்கினி, தூய இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் லூர்தன்னை, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    Next Story
    ×