என் மலர்
புதுச்சேரி

சிங்கிரிகுடி கோவிலில் நடந்த திருமண விழாவில் மணமக்களை பஞ். தலைவர் ராமச்சந்திரன், செயல் அதிகாரி ரமேஷ் பாபு வாழ்த்தினர்.
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் நடத்த அனுமதி
புதுச்சேரி:
புதுவை தவளகுப்பம் அருகே தமிழகப்பகுதியான சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பக்தர்களுக்கு திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை யடுத்து கோவில் சன்னதியில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உரிய அனுமதிபெற்று ஒரு ஜோ டிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள்சன்னதி முன்பு பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடை பெற்றது.
மணமக்களை கிராம பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன், கோவில் செயல் அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் வாழ்த்தினர்.






