என் மலர்
புதுச்சேரி

மக்கள் நீதி மய்யத்தின் நற்பணி இயக்க அணி ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் ஜி.ஆர். சந்திரமோகன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க ஆலோசனை கூட்டம்
- புதுவை மாநில மக்கள் நீதிமய்யத்தின் நற்பணி இயக்க அணியின் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் முத்திரையர்பாளையம் ஜி.கே.வித்யாலயம் பள்ளியில் நடந்தது.
- கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது.
புதுச்சேரி:
புதுவை மாநில மக்கள் நீதிமய்யத்தின் நற்பணி இயக்க அணியின் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் முத்திரையர்பாளையம் ஜி.கே.வித்யாலயம் பள்ளியில் நடந்தது. மாநில செயலாளர்கள் ராம.அய்யப்பன், ரூபன் தாஸ், ருத்ரகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் சக்திவேல் பட்டுரோஸ், சரவணபெருமாள், பழனி வேலன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இன்னாசி ராக், விவசாயிகள் நல அணி ஆதிசங்கர், தொழிலாளர் அணி கண்ணன், மாணவரணி மகின்பர்வத், மங்கலம் பொறுப்பாளர் சுப்ரமணி, கமல்பாலா, கமல் ஜிப்பி, தேவ்நாத், கமல்ராஜ், முகுந்தன், மோகன், செழியன், வாசுகி, மல்லிகா, ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்சியின் மாநில நற்பணி இயக்க அணிக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பிற்கு விண்ணப்பம் பெறப்பட்டு நேர்காணல் நடத்தி தகுதி வாய்ந்த நபர்களை தலைவர் கமல்ஹாசனுக்கு பரிந்துரை செய்வது, கமல்ஹாசன் பெயரில் உள்ள ரசிகர் நற்பணி மன்றங்களை ஒருங்கிணைத்து கட்சியை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவது, கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நற்பணி இயக்க அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.






