search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு மருத்துவமனையில் ஊசி போட குவிந்த மக்கள்
    X

    நாய் கடிக்கு ஊசி போட வந்த பொதுமக்கள்.

    அரசு மருத்துவமனையில் ஊசி போட குவிந்த மக்கள்

    • வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    • சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் பெருக்கத்தை தடுக்க செய்யும் கருத்தடை பணிகள் முடங்கி உள்ளன. இது நாய்கள் பெருக்கத்துக்கு ஓர் முக்கியக்காரணம்.

    புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் சாலையில் நடந்து சென்றோர், வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.

    ரெட்டியார்பா ளையத்திலிருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்றது மேலும் 8 பேரை கடித்தது. இதில் மொத்தமாக 15 பேர் காயமடைந்து நாய்கடி தடுப்பூசி போட்டனர்.

    இந்த நிலையில் இன்றுகாலை புதுவை நகராட்சி அமைந்துள்ள கம்பன் கலையரங்கம் அருகே நாய் ஒன்று பலரை விரட்டி கடித்துள்ளது. இதில் 6 பேர் வரை காயம் அடைந்தனர். அதேபோல் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் 9 பேரை நாய் கடித்துள்ளது.

    காலை நாய் கடித்த 15 பேர் புதுவை அரசு மருத்துவமனையில் நாய்கடி ஊசி போட்டு சென்றனர். இதனால் சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×