என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
    X

    நோணாங்குப்பம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

    • சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • குடிநீர் தொட்டியினை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் சபாநாயகரிடம் முன் வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் ரூ.1 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் பொது குடிநீரில் வருகிற குடிநீரானது மஞ்சள் நிறத்தில் வருகிறது. எனவே குடிநீர் இணைப்பு பைப்புகளை மாற்றிட வே ண்டும். குடிநீர் தொட்டியினை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் சபாநாயகரிடம் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என ஆணையருக்கு அவர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×