என் மலர்
புதுச்சேரி

வீடு வீடாக சென்று கென்னடி எம்.எல்.ஏ. நிலவேம்பு கசாயம் வழங்கிய காட்சி.
50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம்-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதுவையில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று தொகுதி முழுவதும் பொதுமக்கள் நலம் காக்க நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிநடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் மக்கள் பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க உப்பளம் தொகுதி தி.மு.க சார்பில், தொகுதியில் உள்ள 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியினை தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்.
உப்பளம் தொகுதியில் அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று தொகுதி முழுவதும் பொதுமக்கள் நலம் காக்க நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிநடை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story