என் மலர்
புதுச்சேரி

முன்னாள் இயக்குனர் ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்த காட்சி.
புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு கருத்தரங்கம்
- ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
- நிர்வாக துணை பதிவாளர் ராஜசேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கண்டுபிடிப்பு கவுன்சில் அமைப்பு சார்பில் புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரியின் டீன் டாக்டர் ராகேஷ் சேகல் தலைமை தாங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் துணைத்தலைவர் மற்றும் மத்திய அரசின் அடல் இன்னோவேஷன் மிஷன், கூடுதல் செயலாளர் நிதி ஆயோக் பணி முன்னாள் இயக்குனர் ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
மேலும் புத்தகத்தின் முக்கியத்துவம், மனிதனின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும் சிறிய யோசனைகள், கண்டுபிடிப்பு காப்புரிமைகள் எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கி கூறினார்.
இக்கருத்தரங்கில் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ வளர்ச்சி மற்றும் வெளிப்புற சேவையின் இயக்குனர் ஜெயசிங், தலைமை வளர்ச்சி அதிகாரி செந்தில்குமார், நிர்வாக துணை பதிவாளர் ராஜசேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.






