என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஜிப்மரின் அனைத்து பதவிகளிலும் புதுவை இளைஞர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு -தி.மு.க. வலியுறுத்தல்
- ஜிப்மரில் மருத்துவக் கல்விக்கான இடங்களில் புதுவைக்கு இட ஒதுக்கீடு தொடரும் நிலையில் வேலை வாய்ப்பிலும் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும்.
- அப்படி இல்லையெனில் மாநில நலனுக்கும், நோயாளிக ளுக்கும் துரோகம் இழைக்கும்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ஜிப்மரில் மருத்துவக் கல்விக்கான இடங்களில் புதுவைக்கு இட ஒதுக்கீடு தொடரும் நிலையில் வேலை வாய்ப்பி லும் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும். ஜிப்மரின் அனைத்து பதவிகளிலும் 25 சதவீத இடங்கள் புதுவை இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதனை அடிப்படையாக கொண்டு ஜிப்மர் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செவிலியர் பதவிக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகுதியா னவர்கள் பட்டியலை பெற்று தேர்வு நடத்த வேண்டும். விண்ணப்பிக்கும் தகுதியில் உள்ளூர் மொழிகட்டா யம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இணைக்க வேண்டும்.
அப்படி இல்லையெனில் மாநில நலனுக்கும், நோயாளிக ளுக்கும் துரோகம் இழைக்கும். தற்போதைய அறிவிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். அத்துடன் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ., அறிக்கையில் கூறியுள்ளார்.






