search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமியிடம் நேரு எம்.எல்.ஏ. மனு
    X

    கோப்பு படம்.

    ரங்கசாமியிடம் நேரு எம்.எல்.ஏ. மனு

    • புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் வழங்காமல் நேரடி நியமன முறையை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.
    • இது அரசின் தவறு என்பதை முதலில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உணர வேண்டும்.

    புதுச்சேரி:

    சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு முதல் அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் வழங்காமல் நேரடி நியமன முறையை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

    இதனால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எல்.டி.சி., யூ.டி.சி. பணியில் இருப்பவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

    கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக வரையறுக்கப்பட்ட துறை போட்டி தேர்வுகள் அரசு நடத்தாததால் மேற்கண்ட அமைச்சக ஊழியர்களுக்கு சரியான கால கட்டங்களில் பதவி உயர்வு கிடைக்கவில்லை.

    இது அரசின் தவறு என்பதை முதலில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உணர வேண்டும். இதற்கான தீர்வை உயர் அதிகாரிகள் உடனே ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

    அதே நேரத்தில் தற்போதுள்ள நியமன விதியின்படி உதவியாளர் பதவிக்கு நேரடி தேர்வு நடந்தால் வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு வரவாய்ப்பு அதிகம் உள்ளது.

    மேலும் இதனால் எல்.டி.சி, யூ.டி.சி. பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உருவாகாத தேக்க நிலை ஏற்படும் இதனால் புதுவையை சேர்ந்த படித்து முடித்த பட்டதாரி இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்புக்கான கனவு பறிபோகும் நிலை உண்டாகும்.

    ஆகையால் அரசு உதவியாளர் நியமன விதிகளில் உள்ள குறைபாடுகளை களைந்து புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பதவி உயர்வு மூலம் பயன்பெறும் விதமாக நியமன விதிகளில் திருத்தம் செய்து யூ.பி.எஸ்.சி.க்கு பரிந்துரை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

    இதனைஅரசு கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதுவை மாநிலத்தில் தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் எல்.டி.சி., யூ.டி.சி., உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

    இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×