என் மலர்
புதுச்சேரி

சாலையோரம் வசிப்போருக்கு குடியிருப்பு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்திய காட்சி.
சாலையோரம் வசிப்போருக்கு குடியிருப்பு-முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைப்பது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமையில் தெருவோரவாசிகள் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.
- மக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ரங்கசாமி விரைவில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்னசுப்பராய பிள்ளை வீதி, மோந்திரேஸ் வீதி, கந்தப்பாவீதி, புஸ்ஸி வீதி போன்ற வீதிகளில் நடைபாதையில் தங்கி இருந்த குடும்பங்களுக்காக ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.
இந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைப்பது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமையில் தெருவோரவாசிகள் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.
அப்போது, சாலையோரம் வசிப்போரின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்து கொடுக்கும்படியும், வீடுகளை ஒப்படைக்கும் படியும் நேரு எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
மக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ரங்கசாமி விரைவில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
அப்போது அரசு செயலர் கேசவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






