search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தாய் மொழியான தமிழ் புறக்கணிப்பு
    X

    கோப்பு படம்.

    புதுவையில் தாய் மொழியான தமிழ் புறக்கணிப்பு

    • கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • புதிய கல்வி கொள்கையால் புதுவை மாநிலத்தில் உயர் கல்வித்துறையில் தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பல்வேறு துறை வகுப்புகளில் இது நாள்வரை முதல் 2 ஆண்டுகளுக்கு 4 பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

    மாணவர்களும் ஆர்வத்துடன் நமது தமிழ் மொழி மட்டும் இல்லாமல் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் கற்று வந்தனர். இந்தச் சூழ்நிலையில் மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் ஏற்கனவே 4 பருவங்களில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 ஆண்டுகளில் 2 பருவத்திற்கு மட்டும் தமிழ்மொழி பயிற்றுவித்தால் போதும் என்பது கண்டனத்திற்கு ரியதாகும். வேலைவாய்ப்பு கிடைக்காது.

    இதனால் ஒவ்வொரு கல்லூரிகளிலும் 2 தமிழ் பேராசிரியர்கள் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதே நிலை நீடித்தால் தமிழ் மொழி படித்தவர்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் இனிமேல் வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். அதேபோல் 2 பிராந்திய மொழிகளும் சிதைக்கப்பட்டு விடும். தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள்- மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் தற்பொழுது நடைமுறைப்படுத்தி உள்ள புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகமாக நேரிடும். 4 ஆண்டு படிப்பில் முதலாம் ஆண்டு நின்று விட்டால் சான்றிதழ் கொடுத்து அனுப்புகின்ற முறையும் 2 ஆண்டு நின்று விட்டால் பட்டயம் கொடுத்து அனுப்புகின்ற நிலை ஏற்படும்.

    இதனால் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் ஒரு குழப்பத்தினை மட்டு மல்லாமல் கொந்தளிப்பை யும் இந்த புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய கல்வி கொள்கையால் புதுவை மாநிலத்தில் உயர் கல்வித்துறையில் தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    எனவே புதுச்சேரி அரசு மத்திய பா.ஜனதா அரசினை அணுகி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    தமிழ் மொழியின் மாண்பு கண்டும் மாணவர்களின் போராட்டத்தினை கணக்கில் கொண்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த தமிழ்மொழிப்பாட முறையினை மீண்டும் அமல்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×