என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 8 மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது
    X

    முத்தியால்பேட்டை வாசவி பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி செயினை அகற்றும் காட்சி.

    புதுவையில் 8 மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது

    • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
    • புதுயைில் நீட் தேர்வினை 6,200 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

    புதுச்சேரி:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5,20 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் தேர்வு எழுதினர். புதுயைில் நீட் தேர்வினை 6,200 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

    ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா, தி ஸ்டடி, வில்லியனுர் ஆச்சாரியா, விவேகானந்தா, மணக்குள விநாயகர் கல்லூரி உள்பட 8 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் காலை 11.40 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1,30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் சென்றுவிட்டனர்.

    மாணவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது பல மாணவர்கள் ஆதார் கார்டில் பழைய புகைப்படங்களை மாற்றாமல் வைத்திருந்தனர். பலர் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் இருந்ததால், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மறுக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் பிளஸ்-2 4 தேர்வு அடையாள அட்டையை காட்டியதால் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்படி கொண்டு வராதவர்களி்டம் அவர்களுடன் வந்தவர்களை வீட்டிற்குள் சென்று எடுத்து வருமாறு அறிவுறுத்தினர்.

    தேர்வு எழுத வந்த மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    Next Story
    ×