என் மலர்
புதுச்சேரி

குப்பைகளை அகற்றிய என்.சி.சி. மாணவர்களை படத்தில் காணலாம்.
1 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய என்.சி.சி. மாணவர்கள்
- கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் ஆரோவில் கடற்கரை பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த என்.சி.சி. மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
என்.சி.சி. ஜூனியர் கமிஷன் ஆபீஸர் சீனிவாசலு தலைமையில் நடந்த தூய்மை பணியில் கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வீசி சென்ற சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். பொம்மையார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் உதவியுடன் டிராக்டர் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டது.
இந்தத் தூய்மைப் பணியில் பொம்மையர் பாளையம் கவுன்சிலர் விஜயலட்சுமி நாகராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலு, என்.சி.சி. ஏ.என்.ஓ. சகாயமேரி, சமூக சேவகர்கள் அப்துல் சமத், கோவிந்தன் மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.






