என் மலர்
புதுச்சேரி

முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
- 8-ம் வகுப்பு மாணவிகள் பிரஜூஷா மற்றும் சின்மயா 2-ம் பரிசும் மற்றும் இருவரும் ஒற்றையர் பிரிவில் 3-ம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.
- மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி:
பெத்தி செமினார் பள்ளியில் நினைவு பேரரங்கத்தில் முதலாவது பேராயர் சுழற் கோப்பைக்காண பேட்மிட்டன் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 15-வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவிகள் பிரஜூஷா மற்றும் சின்மயா 2-ம் பரிசும் மற்றும் இருவரும் ஒற்றையர் பிரிவில் 3-ம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவிகள் புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியின் போது பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் உடன் இருந்தார்.
Next Story






