என் மலர்
புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுடன் டி.சி.எஸ். நிறுவன அதிகாரி உரையாடல் நடந்த காட்சி.
எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுடன் டி.சி.எஸ். நிறுவன அதிகாரி உரையாடல்
- டி.சி.எஸ். நிறுவனத்தின் அதிகாரி கணேஷ் திருநாவுக்கரசு கலந்துரையாடினார்.
- அதிகாரி ஜெயக்குமார் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கலித்தீர்த்தாள் குப்பத்தில் இயங்கும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்.ஐ.டி.) கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் அனைத்து துறை என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுடன் நாட்டின் மிகப்பெரிய தொழிற்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தின் அதிகாரி கணேஷ் திருநாவுக்கரசு கலந்துரையாடினார்.
அப்போது அவர், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரி வதற்கான திறன்களை மேம்படுத்துவது, எதிர்கால தொழில் நுட்பத்தின் தேவை கள் குறித்து எடுத்து கூறினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்க மளித்தார். இந்நிகழ்ச்சியினை எம்.ஐ.டி. கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் மலர்கண் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரியின் வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.






