என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி

மருத்துவ கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
ஆயுஷ் மருத்துவமனையில் மருத்துவ கண்காட்சி

- எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- உலக ஆயுர்வேத தினத்தை யொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
புதுச்சேரி:
இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் சார்பில் 8–-வது உலக ஆயுர்வேத தினத்தையொட்டி, பொதுமக்கள், மாணவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், விவசாயிகள் என அனைவரும் ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ஆயுர்வேதம் மருத்துவம் சார்ந்த மக்கள் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து கண்காட்சியை பார்வையிட்டு உலக ஆயுர்வேத தினத்தை யொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்திய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை ஆயுர்வேத திட்ட அதிகாரி டாக்டர் பத்மாவதம்மா வரவேற்றார். அனுதினமும் ஆயர்வேதம் என்ற தலைப்பில் டாக்டர் ராமசாமி பேசினார். டாக்டர் ஜீவா ஆனந்த் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, வேலவன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், அங்காளன், சரவணன், சுப்பிரமணி, கார்த்திகேயன், பாலமுருகன், யோகானந்தன், கலைமணி, கலியபெருமால், கோவிந்த ராஜன், நடராஜன்,, ஏழுமலை, தட்சிணாமூர்த்தி, மனோ, அரிகரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் பிரசன்ன லட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயுர்வேத மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவானந்தம் செய்திருந்தார்.