search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாதா கோவில் வீதியில் வைத்திருந்த மீன் கடைகள் அகற்றம்
    X

    மீன் கடைகளை போலீசார் உதவியுடன் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றிய காட்சி.


    மாதா கோவில் வீதியில் வைத்திருந்த மீன் கடைகள் அகற்றம்

    • சாலை ஓரத்தில் மீன் கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர்.
    • மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதா கோவில் வீதியில் அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சாலை ஓரத்தில் மீன் கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

    அரியாங்குப்பம் மார்க்கெட்டில் மீன் அங்காடி என தனியாக இருந்து வரும் நிலையில் மாதா கோவில் தெருவில் ஆக்கிரமித்து மீன்கடை வைத்துள்ளதால், அங்காடியில் மீன் வியாபாரம் பாதிக்கப்படுகிறது எனவும் தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், புனிதவதி, பில் கலெக்டர் செழியன் மற்றும் கள ஊழியர்கள் மாதா கோவில் வீதிக்கு சென்று போலீசார் உதவியுடன் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை அதிரடியாக அகற்றினர்.

    மேலும் மார்க்கெட்டில் நடைபாதையில் இருந்த கடைகளையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×