search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஊழல் ஆதாரம் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்
    X

    கோப்பு படம்.

    ஊழல் ஆதாரம் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

    • நாராயணசாமிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் சவால்
    • பதில் சொல்ல அவசியமில்லை

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று நிருபர் களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த அரசு மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டு களுக்கு ஆதாரம் இருந்தால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யலாம். சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாவிட்டால் கோர்ட்டிற்கு செல்லலாம். அவர் முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்திக்கட்டும். அதன்பின் ஜனாதிபதியை சந்திக்கட்டும்.

    அவருடைய குற்றச்சாட்டு களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாராயணசாமி எதற்கெடுத்தாலும், எல்லோரையும் ராஜினாமா செய்யுங்கள் என்கிறார். அவர் கூறுவதை பார்த்தால் யாருமே பதவியில் இருக்க முடியாது.

    புதுவை அரசின் எந்த திட்டங்களுக்கும் தடை ஏதும் இல்லை. முதல்-அமைச்சரின் திறமையான நிர்வாகத்தால் அனைத்து நலத்திட்டங்களும், திட்டங்களும் நிறை வேற்றப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம், கியாஸ் மானியம், முதியோர் உதவித்தொகை, மீனவர்கள், விவசாயிகள் நிவாரணம் என எந்த திட்டத்திலும் தடையில்லை.

    வாரத்துக்கு ரூ.20 கோடிக்கு மாநிலம் முழுவதும் பணிகள் நடக்கிறது. பள்ளி கட்டிடம் சீரமைப்பு, புதிய கல்லூரிகள் கட்டுவது, சாலை, கால்வாய், வாய்க்கால் மேம்பாட்டு பணி கள் நாள்தோறும் நடந்து வருகிறது. எந்த திட்டமும் முடங்கவில்லை.

    ஒரு அரசி யல்வாதியை தவிர வேறு யாரும் இந்த அரசை பற்றி குறைகூற வில்லை. நெடுஞ்சாலை களில் டோல்கேட் அமைக்கும் போது உள்ளூர் மக்களுக்கு சலுகை அளிப்பார்கள்.

    விழுப்புரத்திலிருந்து, நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதில் ஒரு இடத்தில் தான் புதுவைக்கான டோல்கேட் அமைக்கப்பட உள்ளது. இதற்கு உள்ளூர் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். ஒருவேளை அதில் சிக்கல் இருந்தால் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    இந்த சாலையில் 60 முதல் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. புதுவையிலிருந்து, விழுப்புரம் செல்லும் சாலையில் கண்ட மங்கலம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மட்டும் நடக்க வேண்டும். இது ப்ரீகாஸ்ட் அடிப்படையில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பணிகள் முடிந்தால் விழுப்புரத்திற்கு சுமார் 35 நிமிடத்தில் செல்ல முடியும்.

    விழுப்புரத்தை தாண்டி திருச்சிக்கு சுமார் 2 மணி நேரத்தில் செல்லலாம். இதனால் வாகனங்களின் எரிபொருளில் சேமிப்பு ஏற்படும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது.

    புதுவையில் ஒட்டுமொத்த மாக 3½ லட்சம் ரேஷன்கார்டு கள் உள்ளது. ஆனால் 9¾ லட்சம் வாகனங்கள் உள்ளது. இதனால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கியமான நேரங்களில் மரப்பாலத்தில் மட்டும் 17 ஆயிரம் வாகனங்கள் கடப்பதாக கணக்கிடப்பட்டு ள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தலைமையில் போக்குவரத்து துறையில் பல கமிட்டிகள் உள்ளது. இந்த கமிட்டி பரிந்துரை களை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.

    ராஜீவ்காந்தி சிலையி லிருந்து இந்திராகாந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க டெண்டர் ஜனவரி மாதம் கோரப்படும். இந்த பாலம் 30 அடி உயரத்தில் அமைய உள்ளது. அடுத்த கட்டமாக மரப்பாலம் பகுதியில் பாலம் அமைக்க வும் திட்டமிட்டு ள்ளோம். கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் வரை 8 அடிக்கு சாலையை அகலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×