என் மலர்
புதுச்சேரி

சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
- புதுவை காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது.
- கடந்த ஆண்டு முதல்- அமைச்சர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது.
இங்கு 500 -க்கும் மேற்பட்ட மாணவ -மாணவி்கள் படித்து வருகின்றனர். இங்கு பேராசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக, பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
பஸ் வசதி மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம்,தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பூட்டிக்கிடக்கும் விடுதியை திறந்து மாணவர்களுக்கு ஒதுக்குமாறு மாணவர்கள் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல்- அமைச்சர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினார். அப்போது 3 மாதங்களில் ஆசிரியர், பற்றாக்குறை தீர்க்கப்படும். பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை இதனை கண்டித்தும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நிரப்பபடாத பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி பேராசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் அனவைரும் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காவிட்டல் கவர்னர் மாளிகை, சட்டசபை ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






