search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குராஷ் தற்காப்புக்கலை மாநில சாம்பியன்ஷிப் போட்டி
    X

    குராஷ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அசோக் ஆனந்தன் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிய காட்சி.

    குராஷ் தற்காப்புக்கலை மாநில சாம்பியன்ஷிப் போட்டி

    • ஆதித்யா பள்ளி குழும சேர்மனும், குராஷ் தற்காப்புக்கலை சங்க தலை வருமான அசோக்ஆனந்தன் தலைமை வகித்தார்.
    • ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில குராஷ் தற்காப்புக்கலை சங்கம் சார்பில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான குராஷ் தற்காப்புக்கலை சாம் பியன்ஷிப் போட்டிகள் பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது.

    பள்ளியின் தலைமை உடல்கல்வி ஆசிரியர் அமீது படேல் வரவேற்றார். ஆதித்யா பள்ளி குழும சேர்மனும், குராஷ் தற்காப்புக்கலை சங்க தலை வருமான அசோக்ஆனந்தன் தலைமை வகித்தார்.

    குராஷ் தற்காப்புக்கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆரோவில் இசையம்பலம் பள்ளி முதல்வர் சஞ்சீவ் ரங்க நாதன், புதுவை பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் இளைய நம்பி, புதுவை பல்கலைக்கழக முன்னாள் சீனியர் ஆடிட்டர் குண சேகரன், ஜூடோ சங்க முன்னாள் தலைவர் பிரதீப்குமார் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் புதுவை மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த குராஷ் தற்காப்புக்கலை பயின்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு குராஷ் சங்க தலைவர் அசோக்ஆனந்தன் மற்றும் சங்க நிர்வாகிகள் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.

    Next Story
    ×