என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய சாலை அமைக்க கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
    X

    புதிய சாலை அமைத்து கொடுக்கும் படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடியிடம் கோரிக்கை விடுத்த காட்சி.

    புதிய சாலை அமைக்க கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

    • கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரிகளுடன் சென்று சாலை அமைக்க இடங்களை அளவீடு செய்தார்.
    • அரிகிருஷ்ணன், சண்முகம், இருதயராஜ், ரவி, ராக்கேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி குட்பட்ட அவ்வைநகர் மற்றும் திருவள்ளுவர் வீதி பகுதியில் புதிய சாலை அமைத்து கொடுக்கும் படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரிகளுடன் சென்று சாலை அமைக்க இடங்களை அளவீடு செய்தார்.

    அப்போது அப்பகுதி மக்கள் திருமூலர் வீதிக்கு பெயர் பலகையும், வாய்க் கால் கட்டை அமைத்து கொடுத்து கொடுக்கும் படி வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனை ஏற்ற கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரியிடம் பேசி இப்பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு, அரிகிருஷ்ணன், சண்முகம், இருதயராஜ், ரவி, ராக்கேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×