என் மலர்
புதுச்சேரி

விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.
காமராஜர் பிறந்தநாள் விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
- புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினர்களாக பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி, பேரவை அமைப்பாளரும் கவியரசு கண்ணதாசன் மற்றும் இலக்கிய கழக நிறுவனரும், தீந்தமிழ் தென்றல், வக்கீல் கோவிந்தராசு ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
இதில் சிறப்பு விருந் தினராக டாக்டர் ரத்தினவேல் காமராஜ் கலந்துகொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச் சிகளை கண்டு களித்தார். புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கள் செய்திருந்தனர்.






