search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்
    X

    இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்

    • மாணவர்-பெற்றோர் நலசங்கம் வலியுறுத்தல்
    • கடந்த 2019-ம் ஆண்டு முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை 150-இடங்களிலிருந்து 180-ஆக உயர்த்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாநில மாணவர்-பெற்றோர் நலசங்கத் தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டு மே மாதத்தில் தேசிய மருத்துவ ஆணையம் புதுவை இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது இந்த மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்ததின் அடிப்படையில் பேராசியர்கள், உதவியாளர்கள், 80-க்கும் மேற்பட்டோர் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை சரி செய்து உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை 150-இடங்களிலிருந்து 180-ஆக உயர்த்தப்பட்டது.

    இதனை தேசிய மருத்துவக் கவுன்சில் எந்தவித ஆய்வும் செய்யாமல், அனுமதி அளித்தது.

    தற்போது தேசிய மருத்துவ ஆணையம் புதியதாக செலுத்தப்பட்ட விதி மற்றும் நெறிமுறைகள் அடிப்படையில் 2024-ஜனவரி மாத இறுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்ய உள்ளது.

    எனவே தற்போது 180-இளநிலை மருத்துவ இடங்களுக்கு உண்டான உதவியாளர்கள், ஊழியர்கள் பணி அமர்த்தியும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதுவை அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×