search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தாதாக்கள் ஆட்சி நடைபெறும் சூழல் வந்துவிட்டது
    X

    கோப்பு படம்.

    புதுவையில் தாதாக்கள் ஆட்சி நடைபெறும் சூழல் வந்துவிட்டது

    • அன்பழகன் பேட்டி
    • புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் சுற்றுலா என்ற பெயரில் கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு முழுவதும் சீரழிக்கப்

    பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோபார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப் மற்றும் கேபரே டேன்ஸ், அதன் தொடர்ச்சியாக விபச்சாரம் ஆகியவை எந்த விதமான தங்கு தடையுமின்றி நடத்தபடுகிறது.

    வெளியூரிலிருந்து புதுவையில் தங்கி படிக்கும் மாணவிகள், வேலை பார்க்கும் பெண்களை சிலர் அணுகி அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர்.கடந்த 2 ஆண்டு காலமாக இது நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை எதையும் தடுத்து நிறுத்தவில்லை.

    அரசு மற்றும் காவல்துறை யின் உயர் அதிகாரிகள் இவை அனைத்தையும பார்வையாளராக வேடிக்கை பார்த்து வரு கின்றனர்.

    எனவே காவல்துறை உயர் அதிகாரியும், கவர்ன ரும் இந்த கலாச்சார சீரழிவை தடுக்க கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.

    சட்டப்பேரவை நிலம் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் மீது சி.பி.ஐ. விசரணைக்கு அனுப்பி உள்ளேன் என சபாநாயகர் கூறினார். இதுவரை அது குறித்து எந்த தகவல் இல்லை.

    உண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் அனுப்பினாரா? அல்லது சமாதானம் செய்ய பணம் ஏதாவது கைமாறியதா.?

    இவ்வாறு அன்பழகன் கூறினார்

    Next Story
    ×